WhatsApp ஹேக் செய்யப்படுவதை தடுக்க வழிமுறைகள்

உலகம் முழுவதும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான யூசர்களால் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரிக்கிறதோ, அதே அளவிற்கு வாட்ஸ்அப் யூசர்களை குறிவைத்து தொடுக்கப்படும் சைபர் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு விதமான நவீன வசதிகள் பல ஹேக்கர்களின் கவனம் வாட்ஸ்அப் யூசர்களின் மீது திரும்ப முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்களது வாட்ஸ் அப்பை ஹேக் செய்ய முயற்சி செய்யலாம். உங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விபரங்கள் ஆகியவற்றை மிக எளிதாக திருடி அவற்றை உங்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும்.
செஸ்செல்லி ரோட்ரிகஸ் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீபகாலமாக அதிகரித்துவரும் வாட்ஸ்அப் ஹேக்கிங் தொடர்பான விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கோவாவில் சமீபத்தில் நடந்த வாட்ஸ் அப் ஹேக்கிங் பற்றிய நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தெந்த வழிகளை கடைபிடித்தால் இதுபோன்ற ஹேக்கர் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றிய வழிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 – ஸ்டெப் வெரிஃபிகேஷன் (2-step Verification) செட்டப் செய்யவும்:
வாட்ஸ் அப்பில் உள்ள 2 – ஸ்டெப் வெரிஃபிகேஷன் எனப்படும் செக்யூரிட்டி ஆப்ஷனை ஆன் செய்து வைத்துக் கொள்வது வாட்ஸ்அப்பிற்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். உங்களது வாட்ஸ்அப் நம்பரை ஹேக்கர்கள் ஹேக் செய்தாலும், அதனை ஓபன் செய்வதற்கு வெரிஃபிகேஷன் கோட் இல்லாமல் உங்களது வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த காரணத்தினால்தான் உங்களது வெரிஃபிகேஷன் கோட் மற்றும் டூஸ்டப் வெரிஃபிகேஷன் பற்றிய விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யவும்:
அவ்வப்போது உங்களது வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து வைத்துக் கொள்வது அவசியமாகும். வாட்ஸ்அப்பால் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படும் செக்யூரிட்டி பேட்ச் மற்றும் புதிய வசதிகளைக் கொண்ட அப்டேட்டுகளை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக் செய்வதிலிருந்து தடுக்க பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளது.
தெரியாத லிங்க் அல்லது மெசேஜ் ஆகியவற்றை கிளிக் செய்ய வேண்டாம்:
தெரியாத நபர்களிடமிருந்து வரும் மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்யவே கூடாது. இவை பெரும்பாலும் ஹேக்கர்கள் அனுப்பும் லிங்குகளாகவே இருக்கும். நீங்கள் கிளிக் செய்யும்போது அதனை பயன்படுத்தி, உங்களது டிவைஸில் உள்ள விவரங்களை உங்களுக்கே தெரியாமல் ஹேக்கர்கள் திருடி விடக்கூடும்.
வாட்ஸ்அப் லிங்க்ட் டிவைஸில் (Linked Device) கவனம் கொள்ளவும்:
உங்களது வாட்ஸ்அப் செட்டிங்கிற்கு சென்று லிங்க்ட் டிவைஸ் என்ற ஆப்ஷனில், வாட்ஸ்அப் எந்தெந்த டிவைஸில் லிங்க் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளவும். ஏதேனும் டிவைஸை நீக்குவதற்கு, அந்த டிவைசைஸின் பெயரில் கிளிக் செய்து லாக் அவுட் என்பதை கிளிக் செய்தால் போதும். அந்த டிவைஸில் இருந்து உங்களது வாட்ஸ்அப் லாக் அவுட் (Log Out)செய்யப்பட்டு விடும்.
உங்களது வாட்ஸ்அப் இயங்கும் டிவைஸும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். கணினியோ அல்லது ஸ்மார்ட்ஃபோனோ எதுவாக இருந்தாலும், அதற்கு பின்கோடு அல்லது செக்யூரிட்டி கோட் பயன்படுத்தி வெளியாட்கள் பயன்படுத்த முடியாத வகையில் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.