இலங்கை செய்தி

மியன்மாரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பியோடிய இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை!

மியான்மரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பிச் சென்ற நூற்றுக்கணக்கான இந்தியர்களில் முதல் தொகுதியினர் இன்று இந்தியாவிற்கு திருப்பியனுப்படவுள்ளனர்.

மியன்மாரின் எல்லை நகரமான மியாவதியின் (Myawaddy)புறநகரில் உள்ள கே.கே. பார்க் (KK Park)  என்று அழைக்கப்படும்  மையம்  எல்லை தாண்டிய ஆன்லைன் மோசடிகள் மற்றும் சட்டவிரோத சூதாட்டத்திற்கு பிரபலமான இடமாகும்.

கடந்த ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இந்த பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது  28 நாடுகளைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தாய்லாந்திற்கு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர்களில் முதல் தொகுதி இந்தியர்கள் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளனர். இந்திய விமானப்படை போக்குவரத்து விமானம் அவர்களை அழைத்து வர தாய்லாந்திற்கு புறப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

465 இந்தியர்களில் சுமார் 270 பேர் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் மீதமுள்ளவர்கள் அடுத்த திங்கட்கிழமை தாய்லாந்திலிருந்து புறப்படுவார்கள் என்று தாய் இராணுவத்தின் வடக்குப் பகுதியான நரேசுவான் பணிக்குழுவின் தளபதி மேஜர் ஜெனரல் மைத்ரீ சுப்ரீச்சா (Maitree Chupreecha) தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!