மும்பை மைதானத்தில் திறக்கப்பட்ட ஜாம்பவான் டெண்டுல்கரின் உருவச்சிலை
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர்.
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
The Good of Cricket ♥️ Sachin Tendulkar.#SachinTendulkarpic.twitter.com/YYa9rNDgFB
— Shubham Kumar (@BharatEcricket) November 1, 2023
‘சாதனை நாயகன்’, ‘கிரிக்கெட் கடவுள்’ என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.
SACHIN… SACHINN ..!!
Sachin Tendulkar statue has been unveiled at Wankhede stadium.
Goosebumps #SachinTendulkarpic.twitter.com/UVCjvPcqcp
— CrickeTendulkar 🇮🇳 (@CrickeTendulkar) November 1, 2023
இந்நிலையில் வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சரத் பவார், ராஜூவ் சுக்லா, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.