காஸாவில் பட்டினியால் வாடும் சுகாதார ஊழியர்கள்
இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸா பகுதியில் வாழும் பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் மனிதாபிமான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காஸா பகுதி முழுவதும் பட்டினி பரவி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா பகுதியில் வசிப்பவர்கள் உதவி மற்றும் சமைத்த உணவைப் பெற நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சில நீண்ட வரிசையில் குழந்தைகள் நிரம்பியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், காஸாபகுதியில் உள்ள மீதமுள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 2,000 சுகாதாரப் பணியாளர்கள் பட்டினியால் வாடுவதாக காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறதே தவிர, காஸா மக்களின் உயிரைப் பாதுகாக்க எந்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.