ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா நெருக்கமாக இணைவது ஏன் – மீண்டும் இணைவது சாத்தியமா?
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைகளுடன் நெருக்கமாக இணைவது நாட்டின் நலனுக்காக என பிரதமர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு வழக்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,
“அமெரிக்கா மற்றும் இந்தியா உடன் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தங்களும் நாட்டின் நலனுக்காகவே உள்ளன, அதற்காக ஒற்றை சந்தையை சுங்க ஒன்றியத்திற்கு பதிலாக முன்னிலைப்படுத்துவது நல்லது.
நெருக்கமான பொருளாதார தொடர்புகள் நமது நாட்டின் நலனுக்காக இருக்க வேண்டும். அதற்காக எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் கவனமாக முடிவு செய்வோம்” என்றார்
இதேவேளை, EU வில் மீண்டும் சேர முடியாது , நாட்டின் வர்த்தக சுதந்திரத்தை இழக்க கூடாது என்றும், இது அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளை மாற்றாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





