ஜப்பானில் ரயிலில் கத்திக்குத்து
ஜப்பானில் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒசாகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து 3 கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் ஜப்பான் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குற்றச் சம்பவங்கள் குறைவாகப் பதிவாகும் நாடாக ஜப்பான் கருதப்படுகிறது.
அந்நாட்டில் கொலை விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. கூடுதலாக, ஜப்பான் துஷ்பிரயோகம் தொடர்பான உலகின் கடுமையான சட்ட அமைப்பைக் கொண்ட நாடாக அறியப்படுகிறது.
எவ்வாறாயினும், அண்மைக்காலமாக, ஜப்பானில் இருந்து பதிவாகியுள்ள துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான கத்திக்குத்து மற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயும் உயிரிழந்தார்.
இது தவிர, கிராமத்தின் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவங்களும் சமீபத்தில் பதிவாகியுள்ளன.