சுவிட்ஸர்லாந்து ரயில் நிலையத்தில் கத்திக் குத்து!! ஒருவர் படுகாயம்
சர்கன்ஸ் ரயில் நிலையத்தில் மூவருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காக அவசர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 அளவில் இடம்பெற்றுள்ளது. மூவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவர் சேர்ந்து ஒருவரை தாக்கி கத்தியால் குத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்துவர்கள் போலீசாருக்கு தகவல் வழங்கினார்கள்.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சம்பவ இடத்தில் கிடந்த நபரை போலீசார் மீட்டு மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர் 42 வயதுடைய செர்பியர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடந்திய இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தப்பியோடிவர்கள் இலத்திரனியல் கூட்டரை எடுத்துச் சென்றதாகவும், இருவரும் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் சாட்சியங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் தப்பியோடிய குற்றவாளிகள் பற்றிய தகவல்களை வழங்கக்கூடியவர்கள் மற்றும் காயமடைந்த நபரைப் பார்த்துக் கொண்டவர்கள் கன்டோனல் பொலிஸைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குற்றத்தின் போது அல்லது குற்றவாளிகள் தப்பிச் செல்லும் போது சர்கன்ஸ் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்களையும் கன்டோனல் போலீசார் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.