பேருந்து சாரதியின் கவனயீனத்தால் இருண்டு போன ஸ்ரீயானியின் வாழ்க்கை
பேருந்து சாரதியால் ஏற்படுத்தப்பட்ட விபத்தினால் ஆதரவற்று போயுள்ள குடும்பம் தொடர்பில் தகவல் வத்தளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயம் அடைந்த 27 வயதான ஸ்ரீயானிக்கு தற்போது கணவர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் 10 ஆம் திகதி வத்தளை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதி ஒருவர், ஸ்ரீயானியும் அவரது கணவரும் பயணித்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கினார். இந்த விபத்தில் ஸ்ரீயானியின் கால்கள் பலத்த சேதமடைந்ததுடன், முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு பகுதியும் சேதமடைந்தது.
ஆனால், ஸ்ரீயானியின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை கண்டறிந்த வைத்தியர்கள், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்க முடிவு செய்தனர். ஸ்ரீயானி 2 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்ததால், அவரது கணவர் குழந்தையை கவனித்து வந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சாரதி பற்றிய எந்த தகவலும் இதுவரை தெரியாத நிலையில், சட்டத்தின் மூலம் தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இந்திக, மனைவி மற்றும் குழந்தையை கவனிக்க ஆள் இல்லாததால் வேலையை இழந்துள்ளார். கவனயீனமற்ற சாரதி ஒருவரால் ஸ்ரீயானி, இந்திக ஆகியோரின் வாழ்வு இருண்டு போயுள்ளது.
எனவே ஸ்ரீயானி மற்றும் இந்திகவுக்கும் எவரேனும் உதவ முடியுமானால், 075 900 3415 என்ற தொலை எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.