இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் : மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு!
 
																																		இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு பொதுஜன பெரமுன தயாராக இருந்தால் அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், “இப்போது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது.
நாம் வெற்றி பெறுவோம் என்பது நல்ல செய்தி. வேட்பாளர் நியமனம் செய்யப்பட்டவுடன் அவர் எவ்வளவு பலசாலி என்பது உங்களுக்கே தெரியும்.
நாங்கள் எப்போதும் ஒரு பொது வேட்பாளரையே முன்வைத்துள்ளோம். அடுத்து வருவது எமது அரசாங்கம். ஜனாதிபதி எங்களுடன் செல்ல தயாராக இருந்தால், நாங்கள் அவருக்கு முழு ஆதரவளிப்போம்” என்றார்.
(Visited 3 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
