இலங்கை அரசியல் எதிர்காலம் ஆபத்தில் – பாதாளக் குழுக்கள் நுழைவது குறித்து எச்சரிக்கை
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாளக் குழு உறுப்பினர்கள் தேசிய அரசியலுக்குள் வருவதற்குத் திட்டமிட்டுள்ளனர். எனவே, இப்படியானவர்களுக்கு இடமளிப்பது தொடர்பில் கட்சிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
“போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். எதிர்காலத்தில் அவர்கள் தேசிய அரசியலுக்குள் வருவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
எனவே, இவ்வாறானவர்களுக்குக் கட்சியில் அங்கத்துவம் வழங்கல், தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கல் என்பன தொடர்பில் கட்சிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இது தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும். இது விடயத்தில் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.” எனவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் வியாபாரிகள், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கட்சி அரசியலுக்கு வந்த பின்னர், வெள்ளை ஆடை அணிந்துகொண்டு கறுப்பு வேலைகளைச் செய்கின்றனர்.” – எனப் பொலிஸ்மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.





