இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த பத்து ஆண்டுகளில் சனத் தொகையில் 25 சதவீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறினார்.
தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்தியக் குழுவின் 78வது அமர்வின் இரண்டாவது நாளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்த எண்ணிக்கை தென்கிழக்கு ஆசியா பிராந்திய சராசரியை விட ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அங்கு மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதியோருக்கான சுகாதார அமைப்பை அணுகுவதை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
தற்போதுவரை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையங்களில் புதிதாக 1000 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட இதுபோன்ற வசதிகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)