இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் : இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள 285 கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அவர்களுள் 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
(Visited 2 times, 2 visits today)