காஸாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்
காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக பலஸ்தீனத்துக்கான இலங்கைப் பிரதிநிதி நாவலகே பெனட் குரே தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக் குவழங்கிய நேர்காணலில், காஸாவில் உள்ள மக்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகத்திடம் குறிப்பிட்ட தகவல்கள் இருப்பதாக பலஸ்தீனத்துக்கான அவர் தெரிவித்துள்ளார்.
எகிப்து நோக்கிய ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்ட போதிலும், காஸாவில் உள்ள வெளிநாட்டவர்கள் இன்னும் அதன் வழியாக வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.
அங்குள்ள 17 இலங்கையர்களையும் வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த பின்னரே அழைத்து வர முடியும் எனவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.