ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணியாற்ற தீவிர ஆர்வம் காட்டும் இலங்கை பெண்கள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய விமான பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது.
நேற்று) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பமானது.
இந்த இரண்டு நாள் நேர்காணலுக்கு நேற்று பெருமளவிலானோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த நேர்காணலுக்காக சுமார் 8,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 200 முதல் 300 பேர் வரை மாத்திரமே பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)