2025ம் ஆண்டிற்கான ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இலங்கையர்
பஹ்ரைனில் (Bahrain) நடைபெறும் 2025ம் ஆண்டிற்கான ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இலங்கையை சேர்ந்த லஹிரு அச்சிந்தா (Lahiru Achinda) ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் 1500 மீட்டர் ஓட்ட போட்டியை 3 நிமிடங்கள் மற்றும் 57.42 வினாடிகளில் முடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், சீனாவின் லுஹியு ஷா (Luhiu Sha) வெள்ளி பதக்கத்தையும் ஹாங்காங்கின் ஹோ சுன் அவ் (Ho Chun Aw) வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
இதற்கிடையில், பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்ட போட்டியில் இலங்கையை சேர்ந்த நெத்மி கிம்ஹானி (Nethmi Kimhani) 4 நிமிடங்கள் மற்றும் 52.32 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)





