தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் அஞ்சல் ஓட்ட போட்டிகளில் தங்கம் வென்ற இலங்கை அணி
இந்தியாவின் ராஞ்சியில் (Ranchi) நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (South Asian Athletics Championships), ஆண்கள் மற்றும் பெண்கள் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட (Relay) போட்டிகளில் இலங்கை அணி தங்கம் வென்றுள்ளது.
இலங்கையின் ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட அணி 39.99 வினாடிகளில் சிறப்பான நேரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

அவர்களை தொடர்ந்து, இலங்கையின் பெண்கள் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட அணி 44.70 வினாடிகளில் போட்டியை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

இதற்கிடையில், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்ட போட்டியில் இலங்கையின் கலிங்க குமாரகே (Kalinga Kumarage) 46.21 வினாடிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)





