இலங்கையில் தொழிற்சாலையில் விபத்து – இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
மஸ்கெலியா, மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
4 பிள்ளைகளின் தந்தையான கிட்ண்ணன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஆராய்ந்த பிறகு , சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)





