இலங்கை ஐரோப்பா

பிரித்தானியாவின் தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள்!

பிரித்தானியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றில், ஒன்றரையாண்டுகளுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களைக் குறித்த பதறவைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

2021ம் ஆண்டு, அக்டோபர் மாதம், கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவில் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்தைக் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும், பின்னர் பரபரப்பெல்லாம் அடங்கிப்போனது. அந்தத் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் ஒன்றரையாண்டுகள் ஆனபிறகும் அங்கேயேதான் இருக்கிறார்கள்.நிலைமை மோசமானதே தவிர, நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

குறைவான இடத்தில், ஒரே கூடாரத்துக்குள் பலர் தங்க வைக்கப்பட்டிருக்க, ஆண்கள் சிலர் தாக்குதல்களுக்கும், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகியுள்ளார்கள்.இப்படி ஒரு தீவில் வந்து சிக்கிக்கொண்டு அனுபவிக்கும் கஷ்டங்களை சகிக்கமுடியாமல் சிலர் தற்கொலை முயற்சி மேற்கொள்ள, அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நாடு ருவாண்டாவாகும்

நடுக்கடலில் தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள்: பதறவைக்கும் ஒரு செய்தி | Sri Lankan Tamils Imprisoned On An Isolated Island

பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது, மோசமான நிலையில் கஷ்டப்பட்டுவருகிறோம், தயவு செய்து எங்கள் புகலிடக்கோரிக்கைகளை பரிசீலியுங்கள், எங்களை பாதுகாப்பான நாடொன்றிற்கு அனுப்பி வையுங்கள் என கோரிக்கை விடுக்கிறார் இரண்டு பிள்ளைகளின் தாயாகிய ஒரு பெண்.இந்நிலையில், சில புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானிய இந்திய கடல் பிரதேசத்துக்கான ஸ்தானிகரான Paul Candler முதல், அமைச்சர்கள், அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு முறையான அடிப்படைத் தேவைகள் முதல் பாதுகாப்பு வரை வழங்கத் தவறியதுடன், மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் அபாயங்களிலிருந்தும் அவர்களை பாதுகாக்கும் கடமையில் அரசு தவறிவிட்டதாக அவர்கள் வாதம் முன்வைத்துள்ளார்கள்.அத்துடன், மற்றொரு வழக்கில், பாதுகாப்பற்ற முறையில் புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவுக்கு செல்ல அரசு அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசு தரப்பிலும் சரி, தனியார் பாதுகாப்பு அமைப்பு தரப்பிலும் சரி, குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளதுடன், தாங்கள் புலம்பெயர்ந்தோரை முறையாக கவனித்துக்கொள்வதாகவும், புகார்கள் முறையாக விசாரிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்