IPL இல் களமிறங்கும் இலங்கை தமிழன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இலங்கையின் வணிந்து ஹசரங்கா இடம் பிடித்திருந்தார். இவர் ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் அணியில் இணைவது தாமதமாகி வந்தது.
இந்த நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்குப் பதிலாக 22 வயது இளம் வீரரான மற்றொரு இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் மாற்று வீரரான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
இவர் ஒரேயொரு டி20 போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது குமார் சங்கக்கரா இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நெட் பவுலராக கொண்டு வந்தார். தற்போது முத்தையா முரளீதரன் அவரை ஐபிஎல் அணிக்கு கொண்டு வந்துள்ளார்.
(Visited 27 times, 1 visits today)