இலங்கை ஜனாதிபதி தேர்தல் : தபால் மூல வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பான தகவல்களின்படி செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் விளம்பரங்கள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு எந்தப் பொறுப்பும் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொய்யானவை எனவும் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 05.08.2024 அன்று நிறைவடைகிறது.
(Visited 12 times, 1 visits today)