ஜப்பானில் இலங்கை பிரஜையின் வெறிச் செயல் – சுற்றி வளைத்த காவல்துறையினர்!
ஜப்பானில் நபர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் டிசம்பர் 22 ஆம் திகதி டோக்கியோவின் யோஷினோயா (Yoshinoya) உணவகத்திற்கு வெளியே இடம்பெற்றுள்ளது.
ஜப்பானின் துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாக சந்தேகத்தின் பேரில் மேற்படி இலங்கையர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் வெளியிடப்படாத தாக்குதலுக்கு இலக்கான நபரின் கை மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையின் குறிப்பிட்டுள்ளனர்.
பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குறித்த நபரை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





