இலங்கையில் லொத்தர் சீட்டில் கிடைத்த பணத்தால் விபரீதம் – மனைவியை கொலை செய்த கணவர்

அரலகங்வில, எல்லேவெவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்த பின்னர் அரலகங்வில பொலிஸில் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் அரலகங்வில பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஸ்ரீயாவதி என்ற 2 பிள்ளைகளின் தாயார் ஆகும்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் உயிரிழந்த ஸ்ரீயாவதிக்கும், தனது கணவர் விமல் சேனாதிலகவுக்கும் இடையில் வாய்த்தகராறு இடம்பெற்றுள்ளது.
லொத்தர் சீட்டில் எடுத்ததில் எவ்வளவு பணம் கிடைத்தது என கணவர் வினவியுள்ளார். மூத்த மகனுக்கு கையடக்க தொலைபேசி வாங்க 50,000 ரூபாய் கொடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஏன் எனக்கு எதுவும் கொடுக்கவிலை என வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் அதிகரித்த நிலையில், அந்த நபர் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் அரலகங்வில பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த வீட்டிற்கு மூத்த பொலிஸ் அதிகாரிகள் குழு வந்து தேடியபோது, ஸ்ரீயாவதி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.