இலங்கை கொத்மலை பஸ் விபத்து: அரசாங்க இழப்பீடு தொடர்பில் வெளியான தகவல்
கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 01 மில்லியன் நிதி வழங்கப்படும் என்றும், அந்த நிதி அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனகொடுவ, பண்டுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வனத்தவில்லுவ, சிலாபம், புத்தள, தனமல்வில, வெல்லவாய, கந்தளாய், றம்பேவவ ஆகிய பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
(Visited 25 times, 1 visits today)





