செய்தி

ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் – 19 ஆண்டுகளின் பின் சிக்கிய மர்மம்

இலங்கையர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டு ரொமானியாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரொமானியாவின் புச்சரெஸ்ட் பகுதியில் 1991ம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலையுடன் தொடர்புடைய இலங்கையர் ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டுக்காக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எதிர்வரும் 23ம் திகதி குறித்த இலங்கையர்கள் ஜெர்மனியிலிருந்து ரொமானியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.

நாடு கடத்தப்பட்டதன் பின்னர் குறித்த இலங்கையர் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!