சிம்பாப்வேக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இலங்கை

சிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
ஹராரேயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பில் மருமானி அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் ராசா 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஹேமந்த 03 விக்கெட்டுக்களையும் சமீர 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் மிஷார ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்ததுடன், பெரேரா ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.