இலங்கை:மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்ட இருவர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் முறையாகப் பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி முன்னிலையில் சட்டத்தரணிகளான கே.எம்.எஸ். திசாநாயக்க மற்றும் ஆர்.பி. ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





