இலங்கை : ஜிந்துபிட்டிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!
ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவட மற்றும் அடுருப்புவீதியைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடுருப்புவீதிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





