உலகின் அழகான தீவுகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த இலங்கை

2025ஆம் ஆண்டுக்கான உலகின் 50 சிறந்த தீவுகள் பட்டியலில், இலங்கை மிகவும் அழகான தீவாக முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது.
உலகளாவிய பயணத் தளமான Big 7 Travel வெளியிட்ட தகவலுக்கமைய, இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த பட்டியல், உலகம் முழுவதும் உள்ள இயற்கை எழில் கொண்ட தீவுகளைக் கொண்டாடுகிறது. பிரபலமான மூரியா (பிரெஞ்சு பாலினீசியா), கலபகோஸ் தீவுகள் (ஈக்வடார்), மற்றும் சீஷெல்ஸ் போன்ற தீவுகளை முந்தி, இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.
Big 7 Travel வெளியிட்ட தகவலுக்கமைய, இலங்கையின், பழமையான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள், அழகிய கடற்கரைகள், தனித்துவமான வனவிலங்குகள், பண்டைய கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், உள்ளூர் அனுபவங்கள் போன்றவையே இலங்கை முதலிடம் பிடித்த காரணமாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான 10 சிறந்த தீவுகள் பட்டியல்
இலங்கை
மூரியா, பிரெஞ்சு பாலினீசியா
சோகோட்ரா, ஏமன்
மடீரா, போர்ச்சுகல்
கலபகோஸ், ஈக்வடார்
கிரேட் எக்ஸுமா, பஹாமாஸ்
சீஷெல்ஸ்
அச்சில் தீவு, அயர்லாந்து
கோ லிப், தாய்லாந்து
மிலோஸ், கிரீஸ்