இலங்கை செய்தி விளையாட்டு

2024 T20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது.

இத்தொடருக்கு தயாராகும் வகையில் 20 அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது,

அதன்படி 15 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். சரித் அசலங்கா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளர்.

மேலும் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கை அணிக்காக 6-வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி:

வனிந்து ஹசரங்க (கேப்டன்), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷா பதிரானா, மற்றும் தில்ஷன் மதுஷங்க.

ரிஸர்வ் வீரர்கள்: 

அஷித ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியானகே.

(Visited 36 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை