இலங்கை – திருகோணமலையில் பொதுச்சந்தைகள், அங்காடி வியாபார நிலையங்களில் திடீர் சோதனை!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால் நேற்று (07) திருகோணமலை நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
திருகோணமலை நகரை அண்டிய பகுதிகளான பொதுச்சந்தைகள், அங்காடி வியாபார நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கிழக்கு மாகாண அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. விக்னேஷ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் பாவனைக்கு உதவாத தராசுகள், முத்திரையிடப்படாத நிலுவை அளவீட்டுக் கருவிகள் போன்றவற்றை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.