இலங்கை புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு! அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் தாள் I மற்றும் இரண்டாம் தாள்களை இரத்து செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி 27 (27) மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் இணைந்து இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)