இலங்கை செய்தி

கனடா பிரதமரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை

கனடா பிரதமரின் அறிக்கையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிடுகிறது.

கனேடியப் பிரதமர் தனது அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்று குறிப்பிட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக நிராகரிப்பதாக அது மேலும் தெரிவிக்கிறது.

இலங்கையின் கடந்த கால முரண்பாடுகள் குறித்து, நாட்டின் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் இவ்வாறான பொய்யான அறிக்கைகள் இன நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.

அத்துடன், இலங்கையின் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கனடாவிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை