இலங்கை : 30 யூனிட்டுக்கும் குறைவாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டண குறைப்பு!
மின்சாரக் கட்டணத்தைக் குறைக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த யோசனைகளின் பிரகாரம் மின்சாரக் கட்டணங்கள் மூன்று ரூபா முதல் ஐம்பது சதம் வரை குறைக்கப்படவுள்ளதாக ஆரம்பக்கட்ட அவதானிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
முன்மொழிவின்படி, முப்பது யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 03.50 காசுகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை மூன்று வீதம் இரண்டு காசுகள் குறைக்கலாம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.





