இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – தெரிந்து கொள்ளவேண்டியவை?
இலங்கையில் நாளைய தினம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் வெற்றிபெறுபவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலங்கை ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.
நடப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உள்ளிட்ட 39 பேரின் வேட்பு மனுக்களை இலங்கை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
ஆனால் ஒரு வேட்பாளர் காலமானார்; அதனால் எஞ்சிய 38 வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கின்றனர்.
தேர்தல் பிரசாரம்
விக்ரமசிங்க கடந்த மாதம் 17ஆம் திகதி தமது தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் (Anuradhapura) தொடங்கினார்.
அதிலிருந்து சுமார் 100 தேர்தல் கூட்டங்களை அவர் நடத்தியுள்ளார்.
அவருக்கு ஈடுகொடுத்து மற்ற சில முக்கிய வேட்பாளர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரசாரம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுற்றது.
தகுதிபெற்ற வாக்காளர்கள்?
இலங்கையில் 17 மில்லியனுக்கும் அதிகமானோர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
அவர்களில் சுமார் 1 மில்லியன் பேர் முதல்முறை வாக்களிப்பவர்கள்.
தேர்தல் நடைமுறை
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒரே வாக்குச்சீட்டில் 3 பேருக்கு வாக்களிக்கலாம்.
மொத்த வாக்குகளில் குறைந்தது 50 சதவீததத்திற்கு மேல் பெறுபவர் வெற்றிபெறுவார்.
முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் முன்னணியில் இருக்கும் முதல் 2 வேட்பாளர்களுக்கு இடையே ‘run-off’ முறையில் போட்டி நடத்த சட்டத்தில் இடமுண்டு.
வாக்களிக்கும் நேரம்
வாக்களிப்பு இலங்கை நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடையும்.
வாக்குகளை எண்ணும் பணிகள் அன்றைய நாளே ஆரம்பித்துவிடும்.
தேர்தல் முடிவு
தேர்தல் முடிவு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிபெற்றவர் அதே நாளில் பதவி உறுதிமொழி எடுத்து அமைச்சரவை உறுப்பினர்களை நியமனம் செய்வார்.