இலங்கை : பெலியத்த துப்பாக்கிச்சூடு! மேலும் ஒரு சந்தேக நபர் கைது!
பெலியத்தையில் 5 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் நேற்று (04.02) விசின் ஹபரதுவேயில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுடம்பே, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)





