இலங்கை: காட்டு யானை தாக்கியதில் கடற்படை அதிகாரி மரணம்
புனேவாவில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
கடற்படை தளத்திற்கு அருகில்இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையானவர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படை முகாமிற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக புனேவ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)