இலங்கை – நீர்கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் சென்டர் : இரு யுவதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் சென்டர்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்து வந்த இரண்டு பெண்களுக்கு எச்ஐவி எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இதனை தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனையின் போது 53 மசாஜ் மையங்கள் மூடப்பட்டு அதில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் விபச்சார விடுதிகள் நடத்தப்படுவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இவ்வாறு நடத்தப்பட்ட 53க்கும் மேற்பட்ட ஸ்பாக்களை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களில் 08 ஆண்களும் 137 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பெண்களில் இருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்களுக்கு விபச்சார சேவை வழங்கியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.தனியார் தொழில் நடத்துகிறோம் என்ற போர்வையில் அவர்களை பதிவு செய்து அவ்வாறான இடங்களை நடத்துகின்றனர்.
எதிர்காலத்தில், விபச்சார விடுதிகளாக நடத்தப்படும் சந்தேகத்திற்கிடமான இடங்கள் சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.