இலங்கை: ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை
6.61 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 59 வயதுடைய நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் 6.61 கிராம் ஹெரோயின் வைத்திருந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ரணராஜா தெரிவித்தார்.
(Visited 47 times, 1 visits today)





