இலங்கை – 115 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் ரூ.115 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 1 கிலோகிராமுக்கு மேல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதாகக் கூறி துபாயிலிருந்து தங்கம் நாட்டிற்கு கடத்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். சந்தேக நபர் சிலாபத்தில் வசிக்கும் 58 வயதுடையவர்.
வாகன பாகங்களுக்கு சுங்கத்தால் விதிக்கப்பட்ட வரியை செலுத்திவிட்டு வெளியேறும் போது சந்தேகத்தின் பேரில் CID அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)