இலங்கை: கேகாலை மருத்துவமனையின் சிறப்பு மருத்துவரைத் தாக்கிய நபர் கைது

கேகாலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக கேகாலை பொது மருத்துவமனையின் முன்பக்கத்தில் சம்பந்தப்பட்ட நபர் சிறப்பு மருத்துவரைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டியைச் சேர்ந்த 29 வயதுடையவர்.
காயமடைந்த சிறப்பு மருத்துவர் தற்போது கேகாலை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)