இலங்கை: எரிபொருள் விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஆக்டீன் 92 , 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை லிட்டருக்கு ரூ.293 ஆகும்.
பெட்ரோல் ஆக்டீன் 95, 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை லிட்டருக்கு ரூ.341 ஆகும்.
லங்கா ஆட்டோ டீசல் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை லிட்டருக்கு ரூ.274 ஆகும்.
லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 பெட்ரோல் 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை லிட்டருக்கு 325 ரூபாய்.
லங்கா மண்ணெண்ணெய் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை லிட்டருக்கு ரூ.178 ஆகும்.
(Visited 1 times, 1 visits today)