இலங்கை செய்தி

சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை (08) நடைபெறவுள்ளது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதற்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கட்சித் தலைமையகத்தில் சில முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் செய்த முறைப்பாட்டையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் யாரும் நுழைய பொலிஸார்  தடை விதித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபைக் கூட்டம் அதன் சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நாளை காலை 10 மணிக்குக் கூட்டப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோரைத் தவிர ஏனைய உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை