இலங்கை

இலங்கை : டயலொக், எயார்டெல் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட ஒப்பந்தம் கைச்சாத்து

டயலொக்கும் ஆசி ஆட்டா குழுமமும் பார்த்தி எயார்டெல்லும் தொழிற்பாடுகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

பங்குதாரர்களின் வருவாயை மேம்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான அனுபவத்தை வழங்கும் நோக்கிலும் இந்நிறுவனங்கள் இணைந்து செயற்படவுள்ளன.

டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி (“Dialog”), ஆசி ஆட்டா குழுமம் பெர்ஹாட் (“Axiata”) மற்றும் பார்த்தி எயார்டெல் லிமிடட் (“Bharti Airtel”) ஆகியன பார்த்தி (“Airtel Lanka”) எயார் டெல்லங்கா லிமிடட்டின் வெளியிடப்பட்ட பங்குகளை முழுமையாக கையகப்படுத்துதல் குறித்த வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு 2024. 04. 18 இல் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த உடன்படிக்கையின் கீழ், எயார்டெல் லங்காவின் வெளியிடப்பட்ட பங்குகளில் நூறு வீதத்தை டயலொக் நிறுவனம் கையகப்படுத்தும். அதேவேளை, டயலொக்கின் வெளியிடப்பட்ட 10.355 வீத மொத்த மதிப்பிலான சாதாரண வாக்குரிமை பங்குகளை பங்கு மாற்று முறை மூலம் பார்த்தி டயலொக் நிறுவனம் எயார்டெலுக்கு வழங்கவுள்ளது.

இந்த பரிவர்த்தனை டயலொக் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்திசெய்யும் வரை இவை,நிலுவையிலும் இருக்கும் என, பார்த்தி எயார்டெல் லிமிடட் கூட்டுத்தாபன தொடர்பாடல்கள் சிரேஷ்ட துணைத் தலைவர் கின்ஷூக்குப்தா தெரிவித்துள்ளார்.

ஆசிஆட்டா

ஒரு பன்முக தொலைத்தொடர்பு நிறுவனமாக இயங்கிவரும் ஆசிஆட்டா ஆனது அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் முன்னோடியாக திகழவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வைக்கமைய, அதன் டிஜிட்டல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிஜிட்டல் வணிகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வணிகங்கள் மூலம் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் பரவலாக தடம்பதித்துள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி

டயலொக் ஆசிஆட்டா குழுமம், ஆசிஆட்டா குழுமம் பெர்ஹாட் (Axiata) இன் துணை நிறுவனமாகும். இது இலங்கையின் முன்னணி Quad-Play (கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, டெலிவிஷன் மற்றும் இணையம்) இணைப்பு வழங்குனர் நிறுவனமாகும். மொபைல், நிலையான தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் கட்டண தொலைக்காட்சி, டிஜிட்டல் சேவைகள், நிதி சேவைகள், மற்றும் சர்வதேச சேவைகளில் சந்தை முன்னோடியாக திகழ்வதோடு டிஜிட்டல் சேவைகள், நிதிச்சேவைகள், மற்றும் தகவல் தொடர்பாடல் சேவைகள் ஆகியவற்றிலும் சந்தையில் வலுவான தடம்பதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. டயலொக் ஆசிஆட்டா குழுமமானது கொழுப்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். மொத்தமாக 3.25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனும் முதலீடு மூலமாக டயலொக் ஆசிஆட்டா குழுமமே இலங்கையின் பாரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டாளர் (FDI) ஆகும். 2019-2023 காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தின் Brand Finance இனால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமம் எனும் கௌரவத்தை டயலொக் பெற்றுள்ளது.

எயார்டெல் ஸ்ரீ லங்கா

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பார்த்தி எயார்டெல் ஸ்ரீலங்கா நிறுவனம் தற்போது ஒரு மில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். Airtel Sri Lanka வழங்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சேவை சிறப்புகள் இலங்கை இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவியுள்ளது. தற்போது Airtel இலங்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் அதிநவீன 5G-தயாரான 4G வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது மற்றும் அதிகபட்ச மதிப்பை வழங்குவதற்காக அதன் வலையமைப்பு ஆற்றலெல்லையை (Network Coverage) தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.  Airtel பற்றி மேலும் அறிய, MyAirtel App அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் Airtel உடன் தொடர்பு கொள்ளவும் அல்லது www.airtel.lk ஐப் பார்வையிடவும்.

எயார்டெல்

இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்ட எயார்டெல், தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 17 நாடுகளில் 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகளாவிய தகவல்தொடர்பு தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும். இது உலகளவில் முதல் மூன்று மொபைல் செயற்பாட்டாளர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளது மற்றும் வலைப்பின்னல்கள் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான அதன் மக்களை உள்ளடக்கியது. எயார்டெல் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு தீர்வுகளை வழங்குவதுடன் ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய மொபைல் செயற்பாட்டாளர் ஆகும். அதிவேக 4G/5G Mobile Broadband, எயார்டெல் Xstream Fiber ஆகியவை 1 Gbps வரை வேகத்தை வழங்குகிறது, இது தேவைக்கேற்ப பொழுதுபோக்கு, இசை மற்றும் வீடியோ, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகள், ஸ்ட்ரீமிங் சேவைகள் ஆகியன எயார்டெல்லின் வாடிக்கையாளர் விற்பனைப் பட்டியலில் அடங்கும். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, பாதுகாப்பான இணைப்பு, Cloud மற்றும் Data Center சேவைகள், Cyber Security, loT, Ad Tech மற்றும் Cloud-based தகவல் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பல தீர்வுகளை எயார்டெல் வழங்குகிறது. மேலதிக விபரங்களுக்கு, www.airtel.com ஐப் பார்க்கவும்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content