இலங்கை வரவு-செலவுத் திட்டம் – போலியான விமர்சனங்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை
வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் போலியான விமர்சனங்களை முன்வைக்காது, தர்க்க ரீதியிலான யோசனைகளை முன்வைக்குமாறு எதிரணிகளிடம், ஆளுங்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவருகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அத்துடன், பாதீட்டிலுள்ள குறைப்பாடுகளையும் சுட்டிக்காட்டினார்.
அதன்பின்னர் ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றினார்.
நாட்டு மக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன், பாதீடு தொடர்பில் போலியான விமர்சனங்களை முன்வைக்காமல், தர்க்க ரீதியிலான கருத்துகளை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.





