இலங்கை – களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், நேற்று (28.12) பிற்பகல் சுகயீனமுற்றிருந்த நிலையில். மருத்துவ மனையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். பின்னர் மீண்டும் சுகயீனமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஹெரோயின் போதைப்பொருளுக்காக சிறைச்சாலையில் இருந்தவர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயொன்றும் பரவி வருவதால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள கைதிகள் அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மூளைக் காய்ச்சலுக்கான நோயெதிர்ப்பு மருந்துகளை ஆபத்தானதாகக் கருதப்படும் மற்ற சிறைகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.