இலங்கை

இலங்கை: வருடத்தின் முதல் 16 நாட்களில் துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி: சஜித் வெளியிட்ட அறிக்கை

இலங்கையில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, இந்த வருடத்தின் முதல் 16 நாட்களில் 05 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 04 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் குற்றவாளிகளால் குற்றச் செயல்கள் ஏற்பாடு செய்யப்படுவதாக பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச, பொலிஸ் திணைக்களத்தின் பிரகாரம், அவ்வாறான 188 குற்றவாளிகளுக்கு INTERPOL சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகள், கொலைகள் மற்றும் கப்பம் பெறுதல் தொடர்பான சம்பவங்களின் பின்னணியில் தற்போது வெளிநாடுகளில் இருக்கும் 63 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார். 

இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரிப்பதால் சாதாரண குடிமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தடுக்கப்படுவதாகவும், குற்றங்களை குறைப்பதற்கு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்