இலங்கை செய்தி

இலங்கை: வீட்டு வசதிக்கான கோரிக்கைகளை முன்வைத்த 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மடிவெல வீடமைப்புத் தொகுதியில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களுக்காக 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னர் திருப்பியளிக்கப்பட்ட 25-30 வீடுகள் தற்போது புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்காக புனரமைக்கப்படுவதாக விளக்கமளித்த ரோஹணதீர, இந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மொத்தமுள்ள 108 உத்தியோகபூர்வ இல்லங்களில், 80 ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காகவும், 28 எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற வளாகத்தில் இருந்து 40 கிலோமீற்றர்களுக்கு மேல் வீடுகள் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மடிவெல வீடமைப்பு வளாகத்தில் உத்தியோகபூர்வ இல்லங்களைக் கோருவதற்கு தகுதியுடையவர்கள்.

(Visited 49 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை