இலங்கை : மலையகத்தில் 120 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

நல்லதண்ணியா கோவிலில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட சிறுவர்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் உணவு விஷமாகியமையால் 120 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிலின் தஞ்சை ஒன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மக்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 25 பேர் பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியதாகவும் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் உணவு மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்காக பெற்றுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)