இலங்கை

தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைக்கு மறுநாளான 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநரால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை வழங்கப்படும் குறித்த நாளுக்கு பதிலாக எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை அன்று பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளின் அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!