இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் விசேட அறிவிப்பு
ஷெங்கன் விசா விண்ணப்பங்களுக்கான அனைத்து சந்திப்புகளும் VFS குளோபல் இயக்கும் புதிய வலைத்தளம் மூலம் செய்யப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகம் அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல், இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, விண்ணப்பதாரர்கள் இப்போது https://visa.vfsglobal.com/lka/en/deu/login என்ற VFS வலைத்தளம் மூலம் தங்கள் சந்திப்புகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
அத்துடன், முந்தைய சந்திப்பு முறையின் கீழ் செய்யப்பட்ட அனைத்து பதிவுகளும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.





